மாநிலம் முழுவதிலும் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் கொள்முதல் செய்ய ஒரே உரிமம் வழங்கப்படுகிறது. இதுகுறித்து தஞ்சை மாவட்ட ஆட்சியர் ஆ. அண்ணாதுரை வெளியிட்ட செய்திக் குறிப்பு: இதுவரையில் இத்தகைய உரிமத்திற்கு 3 ஆண்டுகளுக்கு ரூ.300 செலுத்த வேண்டும். மாவட்ட எல்கைக்குள் அமைந்துள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களுக்கு மட்டுமே இந்த உரிமம் செல்லுபடியாகும். பிற மாவட்டங்களில் கொள்முதல் வணிகம் செய்ய அந்தந்த மாவட்டங்களில் உரிமம் பெற வேண்டிய நிலை இருந்தது. மத்திய அரசின் ஒரே நாடு, ஒரே சந்தை இலக்கை அடையும் வகையில் தமிழகம் முழுவதும் வணிகம் செய்ய ஒரே உரிமம் பெற்றால் போதும் என்று சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. அதன்படி, ஒற்றை உரிமம் பெற ரூ.600 உரிமக் கட்டணம் செலுத்தினால் மாநிலம் முழுவதிலும் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் கொள்முதல் செய்யலாம். இதற்கான விண்ணப்பங்கள் தஞ்சாவூர், வல்லம், பூதலூர், அம்மாபேட்டை, பாபநாசம், கும்பகோணம், திருப்பனந்தாள், ஒரத்தநாடு, பாப்பாநாடு, மதுக்கூர், பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம், பேராவூரணி ஆகிய ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் வழங்கப்படுகிறது. இந்த உரிமம் சென்னை வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை ஆணையரால் வழங்கப்படுகிறது. இதன்மூலம் வேளாண் விளை பொருள் வியாபாரிகள் தமிழகம் முழுவதிலும் ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் 3 ஆண்டுகளுக்கு வணிகம் செய்யலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Monday, 14 May 2018
வேளாண் பொருள்கள் கொள்முதலுக்கு ஒரே உரிமம்: ஆட்சியர் அறிவிப்பு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment