Monday, 14 May 2018

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள வட்டாட்சியர் அலுவலகங்களில் மே 25-இல் ஜமாபந்தி தொடக்கம்

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் வருவாய்த் தீர்வாயம் (ஜமாபந்தி) மே 25-ம் தேதி தொடங்கப்படவுள்ளது. இதுகுறித்து ஆட்சியர் ஆ. அண்ணாதுரை தெரிவித்திருப்பது: தஞ்சாவூர் மாவட்டத்தில் அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் வருவாய்த் தீர்வாயம் மே 25-ம் தேதி முதல் ஜூன் 12-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. ஒரத்தநாட்டில் மே 25-ம் தேதி முதல் ஜூன் 7-ம் தேதி வரையும், பாபநாசத்தில் மே 25-ம் தேதி முதல் ஜூன் 5-ம் தேதி வரையும், தஞ்சாவூர், கும்பகோணம், திருவிடைமருதூரில் மே 25-ம் தேதி முதல் ஜூன் 1-ம் தேதி வரையும், பேராவூரணி, பூதலூரில் மே 25-ம் தேதி முதல் 31-ம் தேதி வரையும், திருவையாறில் மே 25-ம் தேதி முதல் 30-ம் தேதி வரையும், பட்டுக்கோட்டையில் மே 25-ம் தேதி முதல் ஜூன் 12-ம் தேதி வரையும் ஜமாபந்தி நடைபெறவுள்ளது. வருவாய் தீர்வாயம் நடைபெறும் நாட்களில் நில உடைமையாளர்கள் பட்டா மாறுதல், நிலங்கள் குறித்த எல்லை பிரச்னைகளுக்கு தீர்வு காணுதல் குறித்தும், பொதுமக்கள் வீட்டுமனை ஒப்படை, சாகுபடி, நில ஒப்படை, முதியோர் உதவித்தொகை பெறுதல் போன்ற கோரிக்கைகள் குறித்தும் தீர்வாய அலுவலர்களிடம் மனுக்கள் கொடுத்து தீர்வு பெறலாம். மேலும், வருவாய் தீர்வாயத்தின் நிறைவு நாளில் அந்தந்த வட்டங்களில் வருவாய்த் தீர்வாய அலுவலர்களால் விவசாயிகள் மற்றும் பொதுப் பணித் துறை (நீர் வள ஆதார அமைப்பு), வேளாண்மைத் துறை, ஊரக வளர்ச்சித் துறை, வேளாண்மைப் பொறியியல் துறை, புள்ளியியல் துறை சார்ந்த உட்கோட்ட அலுவலர்கள் அடங்கிய கூட்டம் நடத்தப்படவுள்ளது. இக்கூட்டத்தில் பாசனம் தொடர்பான கருத்துரு, முன்மொழிவுகள், கோரிக்கைகள் ஆகியவை அளிக்கலாம்.

No comments:

Post a Comment