Monday, 14 May 2018

பேராவூரணியில் 'வாகை சூட வாரீர்' உயர்கல்வி கண்காட்சி!



பேராவூரணி: பேராவூரணி பேரூராட்சி திருமண மண்டபத்தில் 'வாகை சூட வாரீர்' என்ற உயர்கல்வி கண்காட்சி நடைபெற்றது.  பெரியார்-மணியம்மை நிகர்நிலை பல்கலைக்கழகம், விடுதலை நாளிதழ் ஏற்பாட்டில் ஞாயிறு அன்று நடைபெற்ற இந்த உயர்கல்வி கண்காட்சியை முன்னாள் மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் மல்லிகை வை.முத்துராமலிங்கம் தொடங்கி வைத்தார். பெரியார் மணியம்மை பல்கலைக்கழக பேராசிரியர்கள் முனைவர் ஏ.அசோக்குமார், முனைவர் கே.செல்வம் ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.  ப்ளஸ்டூ படிப்பிற்கு பிறகு மாணவர்கள் மேற்படிப்பாக என்ன படிக்கலாம் என கண்காட்சியில், கலந்து கொண்ட மாணவர்களுக்கு விளக்கப்பட்டது. பல்வேறு கல்லூரிகள் உயர்படிப்பு குறித்து மாணவர்கள், பெற்றோர்கள் அறிந்து கொள்ளும் வகையில் அரங்கினை அமைத்திருந்தனர்.  கண்காட்சியில் கவிஞர் மோகன், ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் வேலு, திராவிடர் கழக மாவட்ட அமைப்பாளர் சிதம்பரம், திராவிடர் கழக நிர்வாகிகள் அரு.நல்லதம்பி, இரா.நீலகண்டன், சோம.நீலகண்டன், குணசேகரன் மற்றும் ஆர்த்தி உள்ளிட்ட பல்வேறு கல்லூரி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment