Monday, 14 May 2018

பேராவூரணியில் அனுமதியின்றி மணல் அள்ளிய லாரி, மாட்டு வண்டிகள் பறிமுதல்

கோப்புக்காட்சி
பேராவூரணி : பேராவூரணி பகுதியில் உள்ள காட்டாறுகளில் இருந்து திருட்டுத்தனமாக மணல் கடத்தப்படுவதாக வந்த புகாரின் பேரில், வட்டாட்சியர் எல்.பாஸ்கரன், காவல்துறை உதவி ஆய்வாளர் ராமமூர்த்தி, வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர் மற்றும் வருவாய்த்துறை பணியாளர்கள் அடங்கிய குழுவினர் சோதனை நடத்தினர்.  இதில் கொரட்டூர் பகுதியில், அனுமதியின்றி காட்டாற்றில் மணல் அள்ளிக் கொண்டிருந்த லாரியும், ஊமத்தநாடு பகுதியில் மணல் ஏற்றி வந்த 6 மாட்டுவண்டிகளும் பறிமுதல் செய்யப்பட்டு, வட்டாட்சியர் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டன.

No comments:

Post a Comment