மிசோரம் மாநிலத்தில் நடை
பெற்ற 26-ஆவது தேசிய இளையோர் வாலிபால் சாம்பியன்ஷிப் போட்டியில் இரண்டாம் இடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்ற தமிழக அணி வீராங்கனையான பேராவூரணி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவி கே.சம்யுக்தாவுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டு பாராட்டு விழா நடைபெற்றது. தலைமையாசிரியர் சி.கஜனாதேவி தலைமை வகித்தார். உதவி தலைமை ஆசிரியர்கள் ராஜேந்திரன், முருகேசன் முன்னிலை வகித்தனர். சட்டமன்ற உறுப்பினரும், அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி பெற்றோர் - ஆசிரியர் கழக தலைவருமான மா.கோவிந்தராசு, மாணவி கே.சம்யுக்தாவை பாராட்டி வாழ்த்து தெரிவித்தார். பெற்றோர் - ஆசிரியர் கழக துணைத்தலைவர் பால்.ஏ.பக்கர், பொருளாளர் எஸ்.எம்.நீலகண்டன், ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் ஆர்.சந்திரசேகரன், ஓய்வு பெற்ற உடற்கல்வி ஆசிரியர் குமாரவேல், தலைமையாசிரியர்கள் குருவிக்கரம்பை மனோகரன், பேராவூரணி பன்னீர்செல்வம், உடற்கல்வி ஆசிரியர்கள் அன்னமேரி, ரெங்கேஸ்வரி, பயிற்சியாளர்கள் பாரதிதாசன், மூவேந்தர் பாஸ்கர் மற்றும் மாணவிகள் கலந்து கொண்டு பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.
No comments:
Post a Comment