பேராவூரணி ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கூட்டரங்கில் விவசாயிகள் நல தின விழா நடைபெற்றது. வட்டார வேளாண் அலுவலர் எஸ்.ராணி வரவேற்றார். தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கித் தலைவர் உ.துரைமாணிக்கம் தலைமை வகித்து பேசினார். முன்னாள் ஒன்றியத் தலைவர் சாந்தி அசோக்குமார் முன்னிலை வகித்தார். தோட்டக்கலை உட்பட பல்வேறு துறை வல்லுநர்கள் கலந்து கொண்டு துறை சார்ந்த தொழில்நுட்பம், மானிய திட்டம் ஆகியவற்றை எடுத்துரைத்தனர். இதில் தேசிய மண் வள அட்டை 50 விவசாயிகளுக்கும், 50 சதவீத மானியத்தில் சான்று பெற்ற உளுந்து விதைகள் 25 பேருக்கும், 50 சதவீத மானியத்தில் இன கவர்ச்சி பொறி 10 பேருக்கும், திரவ உயிர் உரங்கள் 10 பேருக்கும், தெளிப்பு நீர் கருவி 5 விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது. மேலும் உழவன் செயலி, மண் மாதிரி சேகரிப்பு உள்ளிட்டவை செயல் விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை வேளாண் உதவி இயக்குநர் ஆர்.மதியரசன், உதவி அலுவலர்கள் ஜி.சசிக்குமார், கே.கார்த்திகேயன் உள்பட பலர் செய்திருந்தனர். வட்டார தொழில்நுட்ப மேலாளர் சுரேஷ் நன்றி கூறினார்
Saturday, 5 May 2018
பேராவூரணி ஊராட்சியில் விவசாயிகளுக்கு 50 சதவீத மானியத்தில் உளுந்து விதை வழங்கல்
Recommended Articles
- govt
தஞ்சை மாவட்டத்தில் வாக்குச் சாவடி மறு சீரமைப்பு பணி! Jul 01, 2018
தஞ்சாவூர்:2019ம் ஆண்டு நடைபெறவுள்ள பாராளுமன்ற பொது தேர்தலை முன்னிட்டு. இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளவாறு, தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள 8 சட்டமன...
- govt
திருச்சிற்றம்பலம் கிராம சேவை மையத்தில் விழிப்புணர்வு முகாம்நடைபெற்றது Jul 01, 2018
திருச்சிற்றம்பலம்: பேராவூரணியை அடுத்த திருச்சிற்றம்பலம் கிராம சேவை மையத்தில் மத்திய அரசின் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கல்வி திட்டத்தின் கீழ், கிராமப்...
- crime
பின்னவாசல் பெரிய ஏரியில் மண் அள்ளுவதைக் கண்டித்து மறியல் Jul 01, 2018
பின்னவாசல்: பேராவூரணி அருகே முறைகேடாக ஏரியில் மண் அள்ளுவதைக் கண்டித்து சாலை மறியல் நடத்தப்படும் என கிராமத்தினர் அறிவித்துள்ளனர். தஞ்சாவூர் மாவட...
- govt
குப்பத்தேவன் ஊராட்சியில் சிறப்பு திட்ட முகாம் Jun 30, 2018
பேராவூரணி: குப்ப த்தேவன் ஊராட்சியில் தமிழக அரசின் சிறப்பு திட்ட முகாம் வெள்ளிக்கிழமை வட்டாட்சியர் எல்.பாஸ்க ரன் தலைமையில் நடை பெற்றது.முகாமில், சமூகப...
Labels:
agriculture,
govt
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment