Saturday, 5 May 2018

பேராவூரணி அடுத்த பெருமகளூரில் சொத்து தகராறில் வீட்டுக்கு தீ வைப்பு: 7 பேர் மீது வழக்கு

பேராவூரணி அடுத்த பெருமகளூர் கே.ஆர்.புரத்தைச் சேர்ந்தவர் கணேசன் (60). இவரது மனைவி காந்தி, மகன் பால்ராஜ், இவரது மனைவி அஞ்சலிதேவி. இவர்கள் ஒரே வீட்டில் வசித்து வந்தனர். இந்நிலையில், பக்கத்து வீட்டைச் சேர்ந்த வீரையனுக்கும், கணேசனுக்கும் சம்பவத்தன்று சொத்து தகராறில் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. இதில் வீரையன், அம்மையன், குமரேசன், சரவணன், சீனிவாசன், கதிரேசன், கல்யாணராமன் ஆகியோர் கணேசன் குடும்பத்தாரை தாக்கினராம். அவர்கள், பேராவூரணி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். தகராறை தட்டிக் கேட்ட கணேசன் உறவினர் சுப்பிரமணியன் என்பவரின் வீட்டை தீ வைத்து வீரையன் தரப்பினர் கொளுத்தினராம். இதில் வீடு முழுவதும் எரிந்து சாம்பலானது. ரூ.2 லட்சம் பொருட்கள் சேதமானதாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரில் பேராவூரணி காவல் உதவி ஆய்வாளர் ராமமூர்த்தி, வீரையன் உள்பட 7 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்.

3 comments:

  1. வழக்கறிஞர் அசோக்ராஜ் சென்னை...

    நான் தங்களின் நிலையை உணர்கிறேன் தங்களின் வழக்கை இலவசமாக நடத்தி தருகிறேன்

    கீழ்கண்ட ஆவணம் தயார் செய்து தாருங்கள் :

    1 police station circle limit & contact No:
    2 ரேஷன் கார்டு
    3 நத்தம் புல எண் & பட்டா சான்று
    4 வீட்டு வரி ரசீது
    5 மின் இணைப்பு ரசீது
    6 குடிநீர் இணைப்பு & வரி ரசீது
    7 VAO விடம் நிரந்தர அனுபவ & முகவரி ரசீது

    இலவச சட்ட உதவி

    தொடர்பு கொள்ளுங்கள்

    ReplyDelete