Thursday, 21 June 2018

பேராவூரணியில் தீத்தடுப்பு விழிப்புணர்வு பயிற்சி முகாம்

பேராவூரணி: பேராவூரணி நீலகண்ட பிள்ளையார் கோவில் வளாகத்தில் தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப்பணித் துறை சார்பில் தீத்தடுப்பு விழிப்புணர்வு பயிற்சி முகாம் புதன்கிழமை நடைபெற்றது. திருக்கோவில் நிர்வாக அலுவலர் பி.எஸ்.கவியரசு நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். பேராவூரணி தீயணைப்பு நிலைய அலுவலர் ரெ.ராஜேந்திரன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் தீப்பற்றினால் எப்படி தீயை அணைப்பது, தீப்பற்றினால் எவற்றை செய்யலாம். எவற்றையெல்லாம் செய்யக்கூடாது என்பது குறித்தும், கோவிலில் விளக்கேற்றும் இடங்கள், சமையல் செய்யும்இடங்கள் மற்றும் மின்சாதனப் பொருட்களை பயன் படுத்தும் இடங்களில் செய்யப்பட வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து செயல் விளக்கம் அளித்தனர்.

No comments:

Post a Comment