பேராவூரணியில் இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நேராக மோதிக் கொண்ட விபத்தில் பொறியியல் பட்டதாரி சனிக்கிழமை இரவு உயிரிழந்தார். காயமடைந்த இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தஞ்சை மாவட்டம், பேராவூரணியை அடுத்த ஒட்டங்காடு பகுதியைச் சேர்ந்த ஆல்பர்ட் மகன் ஆனந்த் (21). பொறியியல் பட்டதாரியான இவர் நண்பரான அதே ஊரைச் சேர்ந்த பன்னீர்செல்வம் மகன் மோகனுடன் இரு சக்கர வாகனத்தில் பேராவூரணி நோக்கிச் சென்றார். அப்போது பனஞ்சேரியைச் சேர்ந்த முரளி ( 35) எதிரே இரு சக்கர வாகனம் ஓட்டி வந்தார். பத்திரப்பதிவு அலுவலகம் அருகே வந்த போது இரு வாகனங்களும் நேருக்கு நேராக மோதிக் கொண்டதில் ஆனந்த் சம்பவ இடத்தில் உயிரிழந்தார். காயமடைந்த மோகன் தஞ்சை மருத்துவமனையிலும், முரளி புதுக்கோட்டை மருத்துவமனையிலும் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment