பேராவூரணி: பேராவூரணி வட்டாரம் வேளாண்மைதுறை மூலம் அட்மா திட்டத்தின் கீழ் தென்னையில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி முகாம் களத்தூர் கிராமத்தில் நடைபெற்றது.பேராவூரணி வேளா ண்மை உதவி இயக்குநர் மதியரசன் தலைமை வகித்தார் . அட்மா திட்ட வட்டார தொழில் நுட்ப மேலாளர் சுரேஷ் வரவேற்றார். உதவி. இயக்குநர் மதியரசன் தலைமை வகித்து பேசுகையில், தென்னை கன்றுகள் தேர்வு செய்யும் முறை. நடவு செய்யும் முறை. தென்னையை தாக்கும் பூச்சிகள் மற்றும் நோய்கள் தாக்கும் முறைகள் அதனை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் மற்றும் மூன்று வருட வயதுடைய இளம் தென்னந்தோப்புகளில் உபரி வருமானம் கொடுக்க கூடிய நிலக்கடலை, உளுந்து, கொடி வகை பயிர்கள், காய்கறி பயிர்கள், மலர் செடிகள் ஆகியனவற்றை ஊடுபயிராக சாகுபடி செய்யலாம் என்றும், வருடத்திற்கு ஜூன்- ஜூலை மற்றும் டிசம்பர்- ஜனவரி மாதங்கள் என 2 முறை பேரூட்ட சத்துக்களை கொடுக்க கூடிய யூரியா, சூப்பர், பொட்டாஷ் மற்றும் இயற்கை உரங்களான அங்கக எரு, வேப்பம் புண்ணாக்கு இடுதல் மற்றும் நுண்ணூட்ட உரமான தென்னை நுண்சத்து மற்றும் தென்னை டானிக் இடும் முறைகள் குறித்தும் விரிவாக எடுத்துக் கூறினார். வேளாண்மை அலுவலர் ராணி பேசுகையில், நடப்பாண்டில் அரசு நடைமுறைபடுத்த உள்ள மானிய திட்டங்களின் விபரங்களையும் தென்னையை தாக்கக்கூடிய சிகப்பு கூண் வண்டுவை கட்டுப்படுத்திடும் முறைகள் பற்றியும் தென்னையில் ஒருங்கிணைந்த உர மேலாண்மை, ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறைகள் கடைபிடித்தல் குறித்தும் எடுத்துரைத்தார்.பயிற்சியில் களத்தூரை சேர்ந்த 40 விவசாயிகள் கலந்து பயன்பெற்றனர். முடிவில் வேளாண்மை உதவி அலுவலர் ரவிச்சந்திரன் நன்றி கூறினார். ஏற்பாடுகளை உதவி தொழில்நுட்ப மேலாளர் தமிழழகன், வேளாண்மை உதவி அலுவலர் கார்த்திகேயன் ஆகியோர் செய்திருந்தனர்.
Monday, 25 June 2018
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment