Thursday, 14 June 2018

ரம்ஜான் கொண்டாட வந்த சம்பைபட்டினம் பகுதியைச் சேர்ந்தவர் வாலிபர் விபத்தில் பலி


சம்பைபட்டினம்: பேராவூரணியை அடுத்த சம்பைபட்டினம் பகுதியைச் சேர்ந்தவர் அபுபக்கர். இவரது மகன்அகமது இப்ராகீம் (31). வெளிநாட்டில் வேலை செய்துவந்த இவர் அண்மையில் விடுமுறைக்காக ஊர் திரும்பிஉள்ளார். இந்நிலையில் செவ்வாய்க்கிழமை மாலை பள்ளிவாசல் சென்று நோன்பு திறந்து விட்டு, தொழுகை முடித்து,வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்க சேதுபாவாசத்திரம் நோக்கி தனது இரு சக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தார். அப்போது, கிழக்கு கடற்கரைச் சாலையில் கழுமங்குடா என்ற இடத்தில் சென்று கொண்டிருந்த போது, செங்கமங்கலத்தில் உள்ள தனியார் பள்ளிக்குச் சொந்தமான பேருந்து, பின்னால் வந்து மோதியதில் சம்பவ இடத்திலேயே அகமது இப்ராகீம் பலியானார்.சேதுபாவாசத்திரம் காவல்துறையினர் அவரது உடலை மீட்டு, உடற்கூறாய்விற்காக பேராவூரணி அரசுமருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்து போனஅகமது இப்ராகீமுக்கு, ரூபியாபேகம் என்ற மனைவியும், ஏழு மாத பெண் குழந்தையும் உள்ளனர். ரமலான் பண்டிகை கொண்டாடி விட்டு, விடுமுறை முடிந்து வெளிநாடுசெல்ல இருந்த நிலையில் வாலிபர் பலியான சம்பவம் இப்பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

No comments:

Post a Comment