Thursday, 14 June 2018

பேராவூரணி வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் பூட்டிக் கிடந்த பொதுக் கழிவறை திறப்பு

பேராவூரணி: பேராவூரணி வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள கழிவறை புதன்கிழமை திறக்கப்பட்டு, பொதுமக்கள் பயன்பாட்டிற்கென கொண்டுவரப்பட்டது. பேராவூரணி வட்டாட்சியரின் உடனடி நடவடிக்கைக்கு பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில், தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை சார்பில், மாவட்ட ஆட்சியர் விருப்ப நிதியிலிருந்து 2015 - 16 ஆண்டில் பொதுக் கழிவறை ரூ. 4.60 லட்சம்மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளது.  கட்டப்பட்டு பல மாதங்கள்ஆகியுள்ள நிலையில் இதுவரை பொதுக் கழிவறை திறக்கப்படாமல் இருந்ததால், பல்வேறு அலுவல் காரணமாக வட்டாட்சியர் அலுவலகம் வரும் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகினர். இதனை உடனடியாக திறந்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஒன்றியச் செயலாளர் ஏ.வி.குமாரசாமிகோரிக்கை விடுத்திருந்தார்.  இதுகுறித்து தீக்கதிரில் செவ்வாய்க்கிழமை படத்துடன் விரிவான செய்தி வெளியாகியிருந்தது. இந்நிலையில் செய்திவெளியானதும், பொதுக்கழிவறை பணிகளை முடித்து உடனடியாக திறக்க பேராவூரணி வட்டாட்சியர் எல்.பாஸ்கரன் வருவாய்த்துறையினருக்கு உத்தரவிட்டார். இதையடுத்து புதன்கிழமை அன்று பொது கழிவறை பொதுமக்கள் பயன்பாட்டிற்கென திறந்து விடப்பட்டது.உடனடியாக நடவடிக்கை எடுத்த வட்டாட்சியருக்கும், செய்தி வெளியிட்ட தீக்கதிர் நாளிதழுக்கும் அனைத்து தரப்பினரும் நன்றி தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment