Thursday 10 May 2018

தஞ்சை மாவட்டத்தில் உள்ளாட்சி வார்டு மறுவரையறை



தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக கூட்ட அரங்கில் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள உள்ளாட்சி அமைப்புகளின் வார்டு எல்லைகளை மறுவரையறை செய்தல் மற்றும் உள்ளாட்சி தேர்தல் முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர்  எம்.மாலிக் பெரோஸ்கான் தலைமையில்  இன்று (09.05.2018) நடைபெற்றது.  மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை  முன்னிலை வகித்தார்.  இந்த ஆய்வுக் கூட்டத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, மாவட்ட ஊராட்சி, ஊராட்சி ஒன்றியம், கிராம ஊராட்சி, ஆகிய உள்ளாட்சி அமைப்புகளின் வார்டுகள் மறுவரையறை குறித்து ஏதேனும் ஆட்சேபனைகள் உள்ளனவா எனவும், உள்ளாட்சி தேர்தலுக்கு வேண்டிய படிவங்கள், எழுது பொருட்கள், வாக்குப் பெட்டிகள், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஆகியவற்றின் கையிருப்பு போதுமான அளவில் உள்ளனவா எனவும், வாக்குப் பெட்டிகள் மற்றும் உள்ளாட்சித் தேர்தலுக்கு வேண்டிய பொருட்கள் சரிவர பராமரித்திட உதவி இயக்குநர் அளவிலான அலுவலர்களை நியமித்து ஊராட்சி ஒன்றியங்களில் பராமரித்திடவும், நகரப்பகுதிகளில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் நல்ல நிலையில் உள்ளனவா என்பதைக் கண்காணிக்கவும் அனைத்து உள்ளாட்சி அலுவலர்களுக்கும் உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டது.       முன்னதாக மாநில தேர்தல் ஆணையர் எம்.மாலிக் பெரோஸ்கான் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை அவர்களுடன் பழைய மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும், வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்திலும் அமைந்துள்ள வைப்பறையில் வைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பார்iவியட்டு ஆய்வு செய்தார். பின்னர், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைந்துள்ள வைப்பறையில் வைக்கப்பட்டுள்ள உள்ளாட்சி தேர்தலுக்கு வேண்டிய படிவங்கள், எழுதுபொருட்கள் மற்றும் தேர்தல் தொடர்பான ஆவணங்களை பார்வையிட்டார்.  அதனை தொடர்ந்து பூதலூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் அமைந்துள்ள தேர்தல் வைப்பறையில் ஆய்வு மேற்கொண்டு வாக்குப்பெட்டிகள், படிவங்கள், எழுதுபொருட்கள் இருப்பு குறித்து மாநில தேர்தல் ஆணையர் எம்.மாலிக் பெரோஸ்கான் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.  இந்த ஆய்வில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர். த.செந்தில்குமார், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மந்திராசலம், மண்டல இயக்குநர், நகராட்சிகள் நிர்வாகம் காளிமுத்து, கோட்டாட்சியர் சுரேஷ், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (உள்ளாட்சி தேர்தல்) நாகராஜன், தேர்தல் வட்டாட்சியர் ராமலிங்கம், அனைத்து முதன்மை அலுவலர்கள், வட்டாட்சியர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், செயல் அலுவலர்கள்  கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment