Friday, 22 June 2018

திருச்சிற்றம்பலம் அருகே மின் கம்பி உரசியதால் மினி லாரி எரிந்து சாம்பல்

திருச்சிற்றம்பலம்: திருச்சிற்றம்பலம் அருகே மின் கம்பி உரசியதால் மினிலாரி எரிந்து சாம்பலானது. தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே உள்ள காலகம் கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவர் மினி லாரி சொந்தமாக வைத்து தென்னங்கீற்று மட்டைகள்வியாபாரம் செய்து வருகிறார். புதன்கிழமை இவரது மினி லாரி, திருச்சிற்றம்பலத்தை அடுத்துள்ள பொக்கன்விடுதிவடக்கு கிராமத்தில் கீற்று மட்டைகள் ஏற்றிக் கொண்டு வந்து கொண்டிருந்தது. அப்பொழுது அப்பகுதியில் தாழ்வாக செல்லும் மின்கம்பியில் கீற்று மட்டைகள் உரசியதால், லாரி திடீரெனதீப்பற்றிக் கொண்டது. இந்த சம்பவத்தில் லாரி முழுவதும்எரிந்து சாம்பலானது. இதுகுறித்து தகவல் அறிந்த கீரமங்கலம் தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறையினர் அருகில் தீ பரவாமல் தடுத்தனர். இச்சம்பவம் குறித்து திருச்சிற்றம்பலம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments:

Post a Comment