மல்லிப்பட்டினம்: தஞ்சாவூர் மாவட்ட கடலோரப் பகுதிகளில் வீசிவரும் பலத்த சூறைக்காற்றால் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட 2 படகுகள் கடலில் மூழ்கின. பலத்த சூறைக்காற்று வீசி வருவதால் விசைப்படகுகள் மீன்பிடிக்க கடலுக்குச் செல்லவில்லை. தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப் பட்டினம், கள்ளிவயல் தோட்டம், சேதுபாவாசத்திரம் உள்ளிட்ட மீனவக் கிராமங்களில் இருந்து 301 விசைப்படகுகள் மூலம் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்வது வழக்கம். மல்லிப்பட்டினம், சேதுபாவாசத்திரம் மீன்பிடி இறங்கு தளங்களில் இருந்து திங்கள், புதன்,சனி ஆகிய தினங்களில் விசைப்படகு மீனவர்களும் மற்ற தினங்களில் நாட்டுப்படகு மீனவர்களும் மீன்பிடிக்க கடலுக்குச் சென்று வருகின்றனர்.தஞ்சாவூர் மாவட்ட கடல் பகுதியில் பலத்த சூறைக்காற்று வீசி வருவதால் பெரும்பாலான மீன்பிடிபடகுகள் புதனன்று கடலுக்குச் செல்லவில்லை. இதனால் 220 க்கும்மேற்பட்ட விசைப்படகுகள் கடலுக்கு செல்லாமல் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில், காற்றின் வேகத் துக்கு ஈடுகொடுக்க முடியாமல் மல்லிப்பட்டினம் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கள்ளிவயல் தோட்டத்தைச் சேர்ந்தபாலசுப்பிரமணியம், சுப்பிரமணியன் ஆகியோருக்கு சொந்தமான விசைப்படகுகள் கடலில் மூழ்கின.இதுகுறித்து மீனவர் சங்க தலைவர் தாஜூதீன் கூறுகையில், “ தஞ்சை மாவட்ட கடல்பகுதி அமைதியாக இருக்கும் போது மீன்வளத்துறை அதிகாரிகள் கடலுக்குசெல்ல டோக்கன் வழங்குவதில்லை. தற்போது கடலுக்குள் 60 முதல் 80 கி.மீ. வேகத்தில் பலத்தசூறைக்காற்று வீசி வருகிறது. ஆனால், கடலுக்கு செல்ல அனுமதிடோக்கன் தருகின்றனர். அதிகாரிகள் இங்குள்ள சூழ்நிலை உணராமல், வேறு மாவட்ட வானிலை எச்சரிக்கைப்படி செயல்படுவது கவலையளிப்பதாக உள்ளது. தற்போதைய ஆபத்தான சூழலைக்கருத்தில் கொண்டு மீனவர்கள் பெரும் பாலானோர் தாங்களாகவே கடலுக்கு செல்லவில்லை” என் றார். விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்லாததால், வருமான இழப்பு ஏற்பட்டுள்ளது. சூறைக் காற்று நின்ற பின்னர் கடலுக்குச் செல்வதற்காக காத்துள்ளனர்.
Friday, 22 June 2018
மல்லிப்பட்டினத்தில் சூறைக்காற்று காரணமாக 2 படகுகள் கடலில் மூழ்கின
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment