பேராவூரணி: பேராவூரணி அருகே சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அலிவலம் - நம்பிவயல் இடையேயான சுமார் 9 கி.மீ. சாலைபழுதடைந்த நிலையில் குண்டும் குழியுமாகபோக்குவரத்திற்கு பயனற்ற வகையில் உள்ளது. இவ்வழியே பள்ளி, கல்லூரிபேருந்துகள், மினி பேருந்து, அரசுப் பேருந்து மற்றும் இரு சக்கர வாகனங்களில் தினசரிஏராளமானோர் பயணித்து வருகின்றனர். சுமார் 2 கி.மீ. மட்டுமே சாலை போடப்பட்டநிலையில், அலிவலத்தில் இருந்து அதம்பைதெற்கு அம்பேத்கர் நகர் வரையிலான, 7 கி.மீ சாலை பழுதடைந்த நிலையிலேயே உள்ளது. எனவே, பொதுமக்கள், மாணவர்கள் நலன் கருதி நீண்ட நாட்களாக செப்பனிடப்படாமல், பழுதடைந்த நிலையில் உள்ள தார்ச்சாலையை புதிதாக அமைத்துதர வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Friday, 22 June 2018
அலிவலம் - நம்பிவயல் சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
thanjavur
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment