Friday, 22 June 2018

பேராவூரணி அரசு கலை, அறிவியல் கல்லூரியில் யோகா தின விழா

பேராவூரணி: சர்வதேச யோக தினத் தையொட்டி பேராவூரணி அரசு கலை, அறிவியல் கல்லூரியில் யோகா தின விழா வியாழனன்று கொண்டாடப் பட்டது.நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் முனைவர் வி.செந்தமிழ் செல்வி தலைமை வகித்தார். கல்லூரி யோகாபேராசிரியை பி.விஜயநிர் மலா வரவேற்றார். மனவளக்கலை மன்ற அறக்கட் டளை தலைவர் ராம.வீரசிங்கம், கௌரவ தலைவர் சுப.சோலைமலை ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.பேராசிரியர் மன்னார்குடி பி.எம்.துரைசாமி யோகாகுறித்து சிறப்புரையாற்றினார். நிறைவாக பேராசிரியர் சி.ராணி நன்றி கூறினார்.

No comments:

Post a Comment