பேராவூரணி: தஞ்சாவூர் மாவட்ட மாற்றுதிறனாளிகள் நல அலுவலகமும் சென்னை பிரீடம்ட்ரஸ்ட் இணைந்து செயற்கை அவயங்கள் வழங்குவதற்கான மதிப்பீட்டு முகாம் வியாழக்கிழமை பேராவூரணி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இம்முகாமினை பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் மா.கோவிந்தராசு துவக்கி வைத்தார். முகாமில் மாற்றுத் திறனாளிகளுக்கு தேவையான செயற்கை அவயங்கள் தயார் செய்வதற்கு அளவெடுக்கப்பட்டது. மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல மாவட்ட அலுவலர் இரா.ரவிச்சந்திரன், வட்டாரவளர்ச்சி அலுவலர்கள் சு.சடையப்பன், த.குமரவடிவேல், முடநீக்கியல் வல்லுநர் மோகன்ராஜ், பிரீடம் ட்ரஸ்ட் ஒருங்கிணைப்பாளர் ஸ்டீபன், பிரீடம் ட்ரஸ்ட் தொழில் நுட்ப பணியாளர்கள் கலந்து கொண்டனர்.முகாமில் கலந்து கொண்ட அனைத்து மாற்றுத் திறனாளிகளுக்கும் ஒரு மாத காலத்திற்குள் செயற்கை அவ யங்கள் வழங்கப்படும் என அறிவித்தனர்.
Friday, 22 June 2018
பேராவூரணியில் மாற்றுத்திறனாளிகள் மதிப்பீட்டு முகாம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment