சேதுபாவாசத்திரம்: சேதுபாவாசத்திரம் அருகில் உள்ள ஊமத்தநாடு ஊராட்சியில் 22 மினி டேங்குகள் உள்ளன. இவை அனைத்தும் உள்ளாட்சி அமைப்பு உள்ளபோது முறையாக இயங்கி வந்தது. கடந்த 3 மூன்று ஆண்டுகளாக கடைமடையில் பருவமழை பொய்த்து போனதால் 80 அடியில் இருந்த நிலத்தடி நீர்மட்டம் 150 முதல் 200 அடியை தாண்டிவிட்டது. இதனால் பல்வேறு இடங்களில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி ஆழ்குழாய் கிணறுகளும் வறண்டு நின்றுவிட்டது. அதேபோல் தற்போது 22 மினி டேங்குகளில் ஒரு மினி டேங்க் கூட இயங்கவில்லை. உடையநாடு கடைவீதியில் 50க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இதில் 15க்கும் மேற்பட்ட ஹோட்டல் மற்றும் டீ கடைகள் உள்ளன. இந்த கடைகளுக்கு குடிநீருக்காக கடைவீதி அருகில் இருந்த மினி டேங்கை தான் பயன்படுத்தி வந்தனர். கடைவீதியை தவிர்த்து அருகில் உள்ள 25 குடும்பங்களும் இந்த மினி டேங்கால் தான் பயனடைந்து வந்தனர். இந்த மினிடேங் மோட்டார் பழுதடைந்து ஒரு மாதத்துக்கு மேலாகிறது. இதனால் அருகில் உள்ள பொதுமக்கள் மட்டுமின்றி கடைவீதி வியாபாரிகளும் குடிநீருக்காக அல்லாடும் நிலை ஏற்பட்டுள்ளது. பலமுறை அதிகாரிகளிடம் முறையிட்டும் பழுதுபார்க்க நிதி கிடையாது என்று அதிகாரிகள் அலட்சியத்துடன் கூறுகின்றனர். எனவே குடிநீர் தட்டுப்பாட்டை தவிர்க்க மினி டேங்குகளை பழுதுநீக்கம் செய்துதர வேண்டுமென மாவட்ட நிர்வாகத்துக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Friday, 22 June 2018
ஜூலை 10க்குள் சீரமைப்பதாக உறுதி உடையநாடு கடைவீதியில் மினி டேங்க் பழுதடைந்ததால் குடிநீருக்கு அவதிப்படும் மக்கள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment