Friday, 22 June 2018

சேதுபாவாசத்திரம் அருகே நாட்டுப்படகு மீனவர் நலச்சங்க கூட்டம்

சேதுபாவாசத்திரம்:  சேதுபாவாசத்திரம் அருகே மாவட்ட நாட்டுப்படகு மீனவர் நலச்சங்க கூட்டம் நடந்தது. மீனவர் சங்க கிராம தலைவர்கள் தலைமை வகித்தனர். அதிராம்பட்டினம் காளிதாஸ், சேதுபாவாசத்திரம் முன்னாள் ஒன்றிய துணைத்தலைவர்கள் வெங்கடாசலம், வீரையன் மற்றும் பலர் பங்கேற்றனர். கூட்டத்தில் மாவட்ட தலைவராக சோமநாதன்பட்டினம் ஜெயபால், மாவட்ட செயலாளராக செம்பியன்மாதேவிபட்டினம் பழனிவேல், பொருளாளராக கீழத்தோட்டம் ரவி, துணை தலைவர்களாக  அந்தோணியார்புரம் அந்தோணிபிச்சை, ஏரிப்புறக்கரை ரவிச்சந்திரன், கழுமங்குடா  மாரிமுத்து, கணேசபுரம் குணசேகரன், மந்திரிப்பட்டினம் ரவி, துணை  செயலாளர்களாக சம்பைப்பட்டினம் செய்யது, மல்லிப்பட்டினம்  சந்திரசேகர், கரையூர்தோப்பு சிவராமன், சின்னமனை பன்னீர்செல்வம், அண்ணாநகர்  புதுத்தெரு சங்கர், அடைக்கத்தேவன் ராஜா ஆகியோரும் மேல்மட்டக்குழு  உறுப்பினர்கள் 11 பேர், செயற்குழு உறுப்பினர்கள் 38  பேர், பொதுக்குழு உறுப்பினர்கள் 24 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு  பொறுப்பேற்று கொண்டனர்.

No comments:

Post a Comment