மல்லிப்பட்டினம்:தஞ்சாவூர் மாவட்ட விசைப் படகு உரிமையாளர்கள் சங்க அவசர ஆலோசனைக் கூட்டம் மல்லிப்பட்டினம் கள்ளிவயல் தோட்டம்சங்க அலுவலகத்தில் ஞாயிற்றுக் கிழமை நடைபெற்றது.கூட்டத்திற்கு தமிழ்நாடு மீனவர்பேரவை மாநிலச் செயலாளரும், மல்லிப்பட்டினம் கள்ளிவயல் தோட்டம் சங்கத் தலைவருமான அ.தாஜுதீன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் க.வடுகநாதன், சேதுபாவாசத்திரம் சங்கமுன்னாள் தலைவர் து.செல்வக் கிளி, தலைவர் மு.விஜயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கடந்த ஏப். 15 ஆம் தேதி முதல் ஜூன் 14 ஆம் தேதி வரையிலான 61 நாட்கள் மீன் இனப்பெருக்கம் என்கிற அடிப்படையில் அரசின் தடைக்காலம் அமலில் இருந்து வருகிறது. இக்காலங்களில் என்ஜின்பொருத்தப்பட்ட மற்ற அனைத்து நாட்டுப்படகுகளையும் மீன் பிடித்தொழில் செய்ய அனுமதித்தது அரசின் நோக்கம் நிறைவேறாமலும், மீன் இனப்பெருக்கம் அடையாமலும் விசைப்படகு மீனவர்கள் நஷ்டம் அடையச் செய்வது அவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதும், மனித உரிமை மீறல் செயலாகும். இவற்றை கண்டுகொள்ளாமல் இருக்கும் மத்திய, மாநில அரசுகளை கண்டிப்பது, கடல் சீற்றம்என்றும், விசைப்படகு தொழில் செய்ய செல்லக்கூடாது என உத்தரவிட்டு, மீனவர்கள் வாழ்வாதா ரங்களை சீர்கெட வைத்து, அவர்களின் ஜீவாதார உரிமையில்தலையிட்டு முன் எப்போதும் இல்லாத அளவிற்கு, அரசின் அனுமதி சீட்டு பெறாமல் தன்னுடைய குடும்பவறுமையை போக்கிட மீன்பிடித்தொழிலுக்கு சென்ற விசைப்படகுகள் மீது தண்டனை வழங்குவோம்எனவும், அரசின் வரி நீக்கம் செய் யப்பட்ட டீசல் வழங்கமாட்டோம் என மீனவர்களின் அடிப்படை உரிமையை பறித்து, சட்டம் என்ற காரணத்தைக் கூறி விசைப்படகு மீனவர்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிப்படைய வைத்துள்ளது. அரசு இப்போக்கை கைவிட்டு முன்புபோல் செயல்பட துறை அலுவலர் களுக்கு அரசு உத்தரவிட வேண்டும். மீன் பிடித் தடைக்காலம் கடந்தஏப்.15 ஆம் தேதிக்கு பிறகு 61 நாட்கள் கடன்பட்டு, பசி, பட்டினியுடன் படகுகளை எடுக்கும் போது, தொழிலுக்கு செல்லக்கூடாது எனவும், சங்க நிர்வாகம் பொறுப்பேற்றுக் கொள்கிறது என பொறுப்புக் கடிதம் கொடுத்து, அதன்படி கடலுக்குச்சென்று எவ்வித குறைபாடுமின்றி தொழில் செய்து திரும்பியது. இந்நிலையில், தொழிலுக்கு சென்ற படகுகளுக்கு தண்டனை வழங்குவோம் என துறை மூலம் கடிதம் அளிப்பது, எங்கள் தொழிலை அழிக்கும் நிலைக்கு அரசு வந்துள்ளதோ என மீனவர்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது. தண்டனை வழங்குவோம் என்பதையும், அடிக்கடி தொழில் நிறுத்தம் செய்வதையும் அரசு நிறுத்திக் கொள்ளவேண்டும் என மாநில அரசினை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.ஜூன், ஜூலை மாதங்களில் கடலின் தென் திசையிலிருந்து காற்று 45 முதல் 55 வரை வேகத்துடன் வீசுவது வழக்கமான ஒன்றே. இந்த காலங்களில் மீனவர்கள் காற்றின் வேகத்திற்கு ஏற்ப தொழிலுக்கு செல்வதும், நிறுத்திக்கொள்வதும் மீனவர்களாகிய எங்களுக்கு நன்கு அனுபவம் ஆனதே. அதுமட்டும் அல்லாமல் கடந்த ஜூன் 20 ஆம் தேதி அரசு மீன்பிடி அனுமதிச் சீட்டு வழங்கியும், மீனவர்களாகிய நாங்கள் காற்றின் வேகத்தை கணக்கிட்டு நாங்களாகவே நிறுத்திக் கொண்டோம். இப்படிநாங்களாகவே தொழில் நிறத்திக் கொள்வதும், பகலில் மட்டும் தொழில் செய்துவிட்டு மாலை கரை திரும்பி விடுவதும்வழக்கத்தில் உள்ளது. இந்நிலையில், அரசின் அனுமதியின்றி செல்லக்கூடாது எனகூறுவது எங்களது வாழ்வாதாரத்தை பாதிக்கச் செய்வது மிகவும் வேதனைக்குரியது. இந்நிலையை மாற்றி மீனவர்களின் ஆலோசனைகளை பெற்று சிறு கடல்பகுதியான அலையே இல்லாத தஞ்சைமாவட்டப் பகுதியில் அடிக்கடி அனுமதி வழங்காமல் படகை நிறுத்தும் போக்கை கைவிட வேண்டும் என மாநில அரசினையும், துறை அலுவலர்களையும் இக்கூட்டம் கேட் டுக்கொள்கிறது.மேற்கண்ட தீர்மானங்களை நிறைவேற்ற வலியுறுத்தி, ஏழை மீனவர்களின் பசி, பட்டினி வாழ்வாதாரத்தை கணக்கில் கொண்டு அரசுஉடனடி நடவடிக்கை எடுக்கக் கோரி ஜூன் 29 ஆம் தேதி (வெள் ளிக்கிழமை) மல்லிப்பட்டினம் கிழக்கு கடற்கரைச் சாலையில் காலை 9 மணிக்கு சாலை மறியல்போராட்டம் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது
Wednesday, 27 June 2018
மல்லிப்பட்டினத்தில் ஜூன் 29 மீனவர்கள் சாலை மறியல் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கக் கோரிக்கை
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment