Wednesday, 27 June 2018

தஞ்சாவூரில் ஊரக வளர்ச்சித் திட்டங்களின் கண்காணிப்புக் குழு கூட்டம்

தஞ்சாவூர்: தஞ்சாவூரில் ஊரக வளர்ச்சித்துறை சார்பில் செயல் படுத்தப்படும் மத்திய, மாநில திட்டங்கள் குறித்து மாவட்டவளர்ச்சி மற்றும் கண்காணிப்புக் குழு கூட்டம் நடைபெற்றது.கூட்டத்திற்கு வேளாண்மைத்துறை அமைச்சர் இரா.துரைக்கண்ணு தலைமை வகித்தார். மாநிலங்களவை உறுப்பினர் ஆர்.வைத்திலிங்கம், மாவட்ட ஆட்சியர் ஆ.அண்ணாதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மாவட்ட விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்புக் குழுகூட்டத்தில் ஊரக வளர்ச்சி முகமை மூலமாக செயல்படுத்தப்படும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைஉறுதித்திட்டம், மகளிர் திட்டம் மூலமாக செயல்படுத் தப்படும் தேசிய ஊரக வாழ்வாதார இயக்கம், சமூகநலத்துறை மூலம் செயல்படுத்தப்படும் சமூக பாதுகாப்பு திட்டங்கள், நில அளவைத்துறை மூலம் செயல்படுத்தப்பபடும் நில ஆவணங்கள் நவீனமயமாக்கும் திட்டம், தஞ்சாவூர் மாநகராட்சி மூலம் செயல்படுத்தப்படும் அரசு திட்டங்களான அம்ரூட் திட்டம், பொலிவுறு நகர திட்டம், தொற்றா நோய்கள் கட்டுப்பாட்டுத் திட்டம், அனைவருக்கும் கல்வித் திட்டம், 2017-18 சாகுபடி விவரங்கள், 2018-19 சாகுபடி விவரங்கள், உழவன் செயலி மற்றும் கூட்டுப் பண்ணையத் திட்டம், தேசியஉணவு பாதுகாப்பு சட்டம், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளுர், மேம்பாட்டுத் திட்டம் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் தொகுப்பு மேம்பாட்டு திட்டம் குறித்து விவாதிக்கப்பட்டது.

No comments:

Post a Comment