தஞ்சாவூர்: தமிழகத்தைச் சேர்ந்த தகுதியுள்ள முன்னாள் படைவீரர்களின் சிறார்களுக்கு ஆளுநரை தலைவராகக் கொண்டதொகுப்பு நிதியிலிருந்து ஒவ்வொரு கல்வி ஆண்டும் கல்வி,பயிற்சி உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது.இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்பு தொழில்நுட்பபட்டப்படிப்பு, பட்டயப்படிப்பு ஆகியவற்றுக்கும் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இக்கல்வி உதவித் தொகை பெற பாரத பிரதமரின் கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பம் செய்து அதில்நிராகரிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு மட்டுமே முன்னாள் படைவீரர் நல அலுவலகம் மூலம் கல்வி உதவித்தொகை பெற நடவடிக்கை எடுக்கப்படும்.இதற்கான விண்ணப்பங்களை தஞ்சாவூர் மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தில் 15.10.2018 வரைபெற்று பூர்த்தி செய்யப்பட்ட முழுமையான விண்ணப்பங் களை சமர்ப்பிக்க கடைசி தேதி 15.11.2018 ஆகும். மேலும்,விவரங்களுக்கு தஞ்சாவூர் மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தை நேரில் அணுகி கல்வி உதவித் தொகையினை பெற்று பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் ஆ.அண்ணாதுரை கேட்டுக் கொண்டுள்ளார்.
Wednesday, 27 June 2018
முன்னாள் படைவீரர்களின் சிறார்களுக்கு கல்வி உதவித்தொகை
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment