Wednesday, 27 June 2018

நவக்கொல்லைக்காட்டில் ஆழ்துளைக் கிணறு, நீர்தேக்கத் தொட்டி அமைக்க கோரிக்கை

நவக்கொல்லைக்காடு: பேராவூரணியை அடுத்த நவக்கொல்லைக்காட்டில் ஆழ்துளைக்கிணறு அமைத்து தர வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத் துள்ளனர்.இதுகுறித்து நவக்கொல்லைக்காடு ஆதிதிராவிடர் தெரு பொதுமக்கள் சார்பில்,வழக்கறிஞர் சந்திரசேகரன், ஓய்வு பெற்றஆசிரியர் எம்.குணசேகரன் மற்றும் செ.சுப்பிரமணியன், க.மாரிமுத்து உள்ளிட்ட பலர் கையெழுத்திட்ட கோரிக்கை மனுவைதஞ்சை மாவட்ட ஆட்சியர் ஆ.அண்ணாதுரை, பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் மா.கோவிந்தராசு ஆகியோரிடம் அளித்தனர்.  அம்மனுவில், “நவக்கொல்லைக்காடு ஆதிதிராவிடர் தெருவில் ஏறத்தாழ 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகிறோம். எங்கள் கிராம கோவில் அருகில் மட்டும் 50 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இக்கோயிலுக்கு பல்வேறு இடங்களில் இருந்து திரளான பக்தர்கள் வந்து செல்வது வழக்கம். இங்கு போதிய குடிநீர்வசதி இல்லாததால் வெளியூரில் இருந்து வருவோரும், குடியிருப்பு வாசிகளும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகிறோம். திருவிழா நடைபெறும் காலங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் கூடுவதால் அடிப்படை வசதிகள் இல்லாமல் அவதிப் படுகின்றனர்.  எனவே கோவில் அமைந்துள்ள இடத்தில் ஆழ்துளைக்கிணறு மற்றும் நீர்த்தேக்கத் தொட்டியும், விழாக் காலங்களில் நிகழ்ச்சிகள் நடத்த ஏதுவாக பொது விழாமேடை மற்றும் கழிப்பறை வசதியும் அமைத்து தருமாறும் கேட்டுக் கொள்கிறோம்” என கேட்டுக் கொண்டுள்ளனர்.மனுவைப் பெற்றுக் கொண்ட சட்டமன்ற உறுப்பினர் மா.கோவிந்தராசு, உரியநடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment