Thursday, 14 June 2018

ரயில் சேவை ஒரு வாரத்தில் தொடங்கப்படும் - கோட்ட மேலாளர் உறுதி



திருச்சி: அகல இரயில் பாதை அமைக்கும் பணிக்காக காரைக்குடி, திருவாரூர் இரயில் சேவை கடந்த ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த்து. பல்வேறு கட்டங்களில் சிறிய பெரிய பாலங்கள் மற்றும் அகல இரயில் சாலை அமைக்கும் பணி நடைபெற்று காரைக்குடியில் இருந்து பட்டுக்கோட்டை வரை பணிகள் முடிவடைந்து உள்ளது.

இந்த வழித்தடத்தில் இரயில்வே சாலை பாதுகாப்பு ஆய்வுகள் முடிந்து வெள்ளோட்டமும்,. ஒரு நாள் கட்டண இரயில் சேவையும் நடத்தப்பட்டது.  வெள்ளோட்டம் நடந்து மாதங்கள் பல கடந்தும். இரயில் சேவை தொடங்கப்படவில்லை.

இந்நிலையில் பட்டுக்கோட்டை-காரைக்குடி வழித்தடத்தில் உடனடியாக தொடர் வண்டிச் சேவையைத் தொடங்க உரிய நடவடிக்கைகளை எடுக்க  வலியுறுத்தி மாநிலங்களவை உறுப்பினர்  திருச்சி சிவா மற்றும் தெற்கு இரயில்வே கோட்ட மேலாளரின் நேரடி உதவியாளர் ஆகியோர்களைச் சந்தித்து  பேராவூரணி இரயில்வே பயனாளிகள் சங்கம் சார்பில் கோரிக்கை விண்ணப்பம் அளிக்கப்பட்டது.

விண்ணப்பத்தைப் பெற்றுக்கொண்ட மாநிலங்களவை உறுப்பினர் சிவா உடனடியாக கோட்ட மேலாளரைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினார்.  இதனைத்தொடர்ந்து இன்னும் ஒரு வார காலத்துக்குள் இந்த வழித்தடத்தில் இரயில் சேவைத் தொடங்கப்படும் என்று கோட்ட மேலாளரின் உறுதிமொழியை சங்க நிர்வாகிகளிடம் தெரிவித்தார்.

இச்சந்திப்பில் சங்கத்தின் தலைவர் ஆசிரியர் மெய்ஞ்ஞான மூர்த்தி, செயலாளர் ஏ.கே.பழனிவேல், ஒருங்கிணைப்பாளர் கே.வி.கிருஷ்ணன், மேனாள் வர்த்தகர் சங்கத்தின் செயலாளர் வை.நடராஜன், செயற்குழு உறுப்பினர்கள் பழனிவேல், மெய்ச்சுடர் நா.வெங்கடேசன், ஆர். பி.கோவிந்தன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment