Thursday, 14 June 2018

திருச்சிற்றம்பலம் காவல் நிலைய கட்டிடம் கட்ட செருவாவிடுதியில் நில ஆர்ஜிதம்

திருச்சிற்றம்பலம்:  திருச்சிற்றம்பலம் காவல்நிலையத்திற்கு சொந்த  கட்டிடம் கட்ட செருவாவிடுதியில் நிலத்தை ஆர்ஜிதம் செய்து,  அதில் உள்ள ஆக்கிரமிப்புகளை வருவாய் துறையினர் அகற்றினர். தஞ்சை மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்கள் ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டமாக இருந்த போது, கீரமங்கலத்தில் காவல்நிலையம் செயல்பட்டு வந்தது. அதன் ஒரு பகுதியாக திருச்சிற்றம்பலத்தில்  புறக்காவல்நிலையம் தொடங்கப்பட்டு, திருச்சிற்றம்பலம் கிராமசாவடியிலும் அதன் பின்னர் திருச்சிற்றம்பலம் சூரியநாராயணபுரம் ரோட்டில் உள்ள ஒருவாடகை கட்டிடத்திலும் செயல்பட்டுவந்தது.   கடந்த 1993ம் ஆண்டு முதல்  திருச்சிற்றம்பலம் புறக்காவல் நிலையம், காவல் நிலையமாக  தரம் உயர்த்தபட்டு செயல்பட்டு வருகிறது.    ஆய்வாளர்,  உதவி  ஆய்வாளர்,  சிறப்பு உதவி ஆய்வாளர்கள், பெண் காவலர்கள் என 32 காவலர்கள் இங்கு பணியாற்றி வருகின்றனர். திருச்சிற்றம்பலம்  காவல் நிலையமும் பல வருடங்களாக வாடகை கட்டிடத்தில் தான் செயல்பட்டு வருகிறது.              இந்நிலையில், திருச்சிற்றம்பலம் காவல்நிலையத்திற்கு சொந்த கட்டிடமும் காவலர்களுக்கு குடியிருப்பு வசதியும் செய்து கொடுக்க   பல ஆண்டுகளுக்கு முன்பு தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்தது. ஆனால், திருச்சிற்றம்பலத்தில காவல் நிலையம் கட்டுவதற்கு சரியான இடம் கிடைக்காத்தால் திருச்சிற்றம்பலம் அருகே உள்ள செருவாவிடுதி தெற்கு ஊராட்சியில் உள்ள வெள்ளிச்சந்தை பகுதியில்  அரசுக்கு சொந்தமான புறம்போக்கு இடத்தில் திருச்சிற்றம்பலம் காவல்நிலையத்திற்கு புதிய கட்டிடம் கட்ட  இடத்தை அதிகாரிகள் தேர்வு செய்து  நில ஆர்ஜிதம் செய்தனர். செருவாவிடுதி தெற்கு ஊராட்சி வெள்ளி சந்தை பகுதியில் மேய்ச்சல் தரைகளாக  அரசுக்கு சொந்தமான  சுமார் 20 ஏக்கர்  நிலங்கள் உள்ளன. இதனை பலவேறு நபர்கள் ஆக்கிரமிப்புகள் செய்து வயல்களாகவும், தென்னந்தோப்புகளாகவும் மாற்றி அனுபவம் செய்து வந்தனர்.   இது பற்றிய  வருவாய்த்துறை பதிவேடுகளை நேரில் ஆய்வு செய்த பட்டுக்கோட்டை ஆர்டிஓ  கோவிந்தராசு, தாசில்தார் சாந்தகுமார் ஆகியோர்.  அரசுக்கு சொந்தமான அனைத்து இடங்களையும் அளவீடு செய்ய உத்தரவிட்டனர். அதனைத் தொடர்ந்து திருச்சிற்றம்பலம் காவல்நிலையம் கட்ட தேர்வு செய்யப்பட்ட இடத்தில் இருந்த தென்னை மரங்கள் உள்ளிட்டவை ஜே.சி.பி இயந்திரத்துடன் வேருடன் பிடுங்கி எறியப்பட்டன. பாதிக்கப்பட்ட நபரின் குடும்பத்தினருக்கு அரசின் விதிமுறைகளின்படி உரிய மாற்று இடம் வழங்க  உறுதி அளிக்கப்பட்டது. ஆக்கரமிப்புகளை அகற்றுவதற்காக வருவாய்த்துறை அதிகாரிகளுடன். பட்டுக்கோட்டை டி.எஸ்.பி செங்கமலக்கண்ணன் தலைமையில் 6 இன்ஸ்பெக்டர்கள் மற்றும் சப் இன்ஸ்பெக்டர்கள் உட்பட  100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுட்டிருந்தனர்.   

No comments:

Post a Comment