Thursday, 14 June 2018

சேதுபாவாசத்திரம் அருகே சேதமடைந்த பழமையான பாலம்

சேதுபாவாசத்திரம் : சேதுபாவாசத்திரம் அருகே கல்லணை கால்வாய் பிரிவு 6 ம் நம்பர் பாசன வாய்க்கால்நாடாகாடு,பூக்கொல்லை,கழனிக்கோட்டை,முடச்சிக்காடு,வீரியங்கோட்டை,உடையநாடு வழியாக மரக்காவலசை வரை செல்கிறது. இந்த வாய்க்காலில் கழனிக்கோட்டை பகுதியில் வாய்க்காலின் குறுக்கே ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட குறுகிய பழமை வாய்ந்த பாலம் உள்ளது. இந்த பாலத்தில் அணை திறந்து தண்ணீர் வரும் காலங்களில் பாலத்தின் உட்புறம் உள்ள தடுப்பில் செடி,கொடிகள் சிக்கி தண்ணீர் தேங்கி ஊருக்குள் குறைந்த அளவில் தான் தண்ணீர் விடுகிறது. இதனால் வாய்க்காலின் கடைசி பகுதி வரை முழுமையாக தண்ணீர் சென்றடையாமல் சாகுபடி பாதிப்பு ஏற்படுகிறது. மேலும் பாலம் மிகவும் சேதமடைந்து மோசமான நிலையில் உள்ளது. எனவே இந்த பாலத்தை இடித்து விட்டு அகலப்படுத்தி புதிய பாலம் கட்டித்தர வேண்டும் என்பதே இப்பகுதி விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது. 

No comments:

Post a Comment