தஞ்சை: தஞ்சை மாவட்டத்தில் பிற்பட்டோர் மற்றும் மிகவும் பிற்பட்டோர், சீர் மரபினர், சிறுபான்மையினர் மாணவர் மற்றும் மாணவிகள் விடுதிகளில் சேர வரும் 20ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று கலெக்டர் அண்ணாதுரை தெரிவித்துள்ளார். இது குறித்து கலெக்டர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தஞ்சை மாவட்டத்தில் மாணவர்களுக்கு 26, மாணவிகளுக்கு 11 பள்ளி விடுதிகள் உள்ளது. கல்லூரி மற்றும் பாலிடெக்னிக், ஐடிஐ விடுதிகள் மாணவர்களுக்கு 6, மாணவிகளுக்கு 10 விடுதிகள் உள்ளது. ஆக மொத்தம் மாணவர்களுக்கு 32 விடுதிகளும், மாணவிகளுக்கு 21 விடுதிகளும் உள்ளது. மேற்கண்ட விடுதிகளில் நடப்பு கல்வி ஆண்டில் சேர்க்கை நடக்கிறது. பள்ளி விடுதிகளில் 4ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் சேரலாம். கல்லூரி மற்றும் பாலிடெக்னிக், ஐடிஐ விடுதிகளில் பட்டபடிப்பு மற்றும் பட்டமேற்படிப்பு உள்ளிட்ட படிப்புகளிலும் படிக்கும் மாணவர்கள் சேரலாம். அனைத்து விடுதிகளிலும் தங்கும் இடம், உணவு ஆகியவை இலவசமாக அளிக்கப்படும். 10ம் வகுப்பு பரை படிக்கும் மாணவர்களுக்கு இலவசமாக சீருடை அளிக்கப்படும். 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு வழிகாட்டி வழங்கப்படும். பெற்றோர் அல்லது பாதுகாவலர்கள் ஆண்டு வருமானம் ரூ. 1 லட்சம் மிகாமல் இருக்க வேண்டும். இருப்பிடத்தில் இருந்து படிக்கும் கல்வி நிலையம் குறைந்தது 8 கி.மீக்கு மேல் இருக்க வேண்டும். தகுதியுள்ள மாணவர்கள் விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளர்களிடம் இருந்து அல்லது கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் இருந்து இலவசமாக பெற்றுக்கொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை பள்ளி விடுதிகளை பொறுத்தவரை சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளர் அல்லது மாவட்ட பிற்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் வரும் 20ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். கல்லூரி விடுதிகளை பொறுத்த வரை ஜூலை மாதம் 18ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
Thursday, 14 June 2018
பிசி, எம்பிசி மாணவர் விடுதிகளில் சேர்க்கை வரும் 20ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment