திருச்சிற்றம்பலம்: திருச்சிற்றம்பலம் பகுதியில் உள்ள அங்காடிகளில் கடந்த 2 மாதமான ரேசன் அரிசி குறைத்து வழங்கப்படுவதால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து அதிகாரிகள் விசாரணை நடத்த வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர். பேராவூரணி அருகே உள்ள திருச்சிற்றம்பலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க நிர்வாகத்தின்கீழ் 8 முழுநேர அங்காடி, 9 பகுதிநேர அங்காடிகள் செயல்பட்டு வருகிறது. இவற்றின் மூலமாக அரிசி, கோதுமை, சீனி, பாமாயில், மண்ணெண்ெணய் உள்ளிட்ட அத்யாவசிய பொருட்கள் விநியோகம் செய்யப்படுகிறது. இந்நிலையில் கடந்த 2 மாதங்களாக திருச்சிற்றம்பலம் பகுதிகளில் உள்ள அங்காடிகளில் வழக்கமாக வழங்கப்படும் ரேஷன் அரியை வழங்காமல் குறைத்து வழங்கப்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். வழக்கமாக குடும்ப உறுப்பினர்களின் அளவுக்கேற்ப அதிகபட்சமாக ஒரு ரேஷன் கார்டுக்கு 20 கிலோ அரிசி, வறுமை கோட்டுக்குகீழ் வாழும் மக்களுக்கு சிறப்பு திட்டத்தின்கீழ் 35 கிலோ அரிசி வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் கடந்த 2 மாதமாக 20 கிலோ அரிசிக்கு பதிலாக 17 கிலோ, 35 கிலோவுக்கு பதிலாக 30 கிலோ அரிசி வழங்கப்படுதாக கூறப்படுகிறது. ஆனால் பதிவு செய்யப்பட்ட அலைபேசிகளில் குடும்ப அட்டைத்தாரருக்கு 17 கிலோவுக்கு பதிலாக 20 கிலோவும், 30 கிலோவுக்கு பதிலாக 35 கிலோ ரேஷன் அரிசியும் வழங்கப்பட்டுள்ளதாக குறுந்தகவல்கள் வருகிறது. இதுகுறித்து அங்காடி விற்பனையாளரிடம் கேட்டதற்கு, ரேஷன் அரிசியை அரசு குறைவாக அனுப்பியுள்ளதாக கூறுகிறார். கொடுக்கப்படும் அளவுக்கேற்ப குறுந்தகவல் அனுப்பாமல் கூடுதலாக ரேஷன் அரிசி வழங்கப்பட்டுள்ளது பற்றி கேட்டால் உரிய பதில் வருவது இல்லை. எனவே திருச்சிற்றம்பலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க அங்காடிகளில் உள்ள அனைத்து பதிவேடுகளையும் முழு ஆய்வு செய்வதுடன் குறைவாக ரேஷன் அரிசி வழங்கிய நபர்களுக்கு அந்த அரிசியை மீண்டும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழக அரசுக்கும், தஞ்சை கலெக்டருக்கும் திருச்சிற்றம்பலம் பகுதியில் உள்ள குடும்ப அட்டை தாரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment