திருச்சிற்றம்பலம் .: திருச்சிற்றம்பலம் அடுத்த புனல்வாசல் கிராமத்தில் விண்ணரசி என்பவரது வீட்டில் நேற்று இரவு 12 மணிக்கு சில மர்ம நபர்கள் அவரது வீட்டின் முன்புறம் இருந்த சந்தன மரத்தை வெட்டியுள்ளனர் சத்தம் கேட்டு விண்ணரசியும் அவரது கணவரும் வெளியில் வந்து பார்த்த போது மர்ம நபர்கள் தப்பி ஓட ஊர் மக்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டு பொதுமக்கள் மர்ம நபர்களை விரட்டி பிடிக்க முயற்சி செய்தனர் ஆனால் அவர்கள் தப்பி ஓடி விட்டனர் .... இதற்கிடையே அவரகள் திருடுவதற்கு பயன்படுத்திய 2 இரு சக்கர வாகனம் மரம் வெட்ட பயன்படுத்திய ஆயுதம் போன்றவைகளை ஊர் மக்கள் கைப்பற்றினர் .இதே பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த வீட்டின் எதிரே உள்ள வீட்டில் 30 ஆண்டுகள் வளர்த்த பல இலட்ச ரூபாய் மதிப்புள்ள சந்தன மரத்தை வெட்டி திருடி சென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
எனவே வனத்துறையும் காவல்துறையும் மர்ம நபர்களை உடனடியாக கண்டறிந்து கடுமையான நடவடிக்கை எடுக்குமாறும் மேலும் எங்கள் பகுதியில் இருக்கும் மரங்களுக்கும் எங்களுக்கும் பாதுகாப்பு வழங்குமாறும் பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.
No comments:
Post a Comment