Tuesday, 12 June 2018

பேராவூரணி தாசில்தார் அலுவலக பொது கழிவறையை திறக்க கோரிக்கை

பேராவூரணி, ஜூன்12: பேராவூரணி தாசில்தார் அலுவலக வளாகத்தில், தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை சார்பில், மாவட்ட கலெக்டர் விருப்ப நிதியிலிருந்து 2015-16 ஆண்டில் பொது கழிவறை ரூ.4.60 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளது. கட்டப்பட்டு பல மாதங்கள் ஆகியுள்ள நிலையில், இதுவரை பொதுக் கழிவறை திறக்கப்படாமல் உள்ளதால், பல்வேறு அலுவல் காரணமாக தாசில்தார்  அலுவலகம் வரும் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். எனவே கட்டிமுடித்து திறக்கப்படாமல் உள்ள கழிவறையை உடனே திறக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.   இதுகுறித்து சிபிஎம் ஒன்றியச் செயலாளர் குமாரசாமி கூறுகையில், “ கட்டப்பட்டு பல மாதங்கள் ஆகிய நிலையில் கழிவறை திறக்கப்படாமல் உள்ளதால், பெண்கள், முதியோர்கள் பெருமளவு பாதிக்கப்படுகின்றனர். தாசில்தார் அலுவலகத்தில் தரைத்தளத்தில் கணினி அறை செல்லும் வழியில் ஆண், பெண் இருபாலருக்கும் கழிவறை உள்ளது. இவை முறையாக பராமரிக்கப்படாமல் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் தண்ணீர் வசதி இல்லாமல் உள்ளது. வருவாய்த்துறை பணியாளர்கள், குறிப்பாக பெண் ஊழியர்கள், தாசில்தார் அலுவலகம் வருவோர் என பலரும் அவதிப்படுகின்றனர். எனவே காலதாமதமின்றி புதிதாக கட்டப்பட்ட கழிவறையை திறந்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும்”என்றார்

No comments:

Post a Comment