ஆதனூர்: பேராவூரணி பேரூராட்சி ஆதனூரில் மேல்நிலை குடிநீர் தேக்க கட்டுவதற்கு அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது. பேராவூரணி பேரூராட்சி ஆதனூரில் குடிநீர் தட்டுப்பாடு நிலவுவதால் புதிதாக மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்க வேண்டுமென பொதுமக்கள் மற்றும் முன்னாள் கவுன்சிலர் ஆனந்தன் ஆகியோர் எம்எல்ஏ கோவிந்தராசுவிடம் கோரிக்கை விடுத்திருந்தார். இதையடுத்து எம்எல்ஏ கோவிந்தராசு தனது சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ஆழ்துளை கிணறு மற்றும் மேல்நிலை குடிநீர் தேக்க தொட்டி அமைக்க ரூ.12.50 லட்சம் நிதி ஒதுக்கினார். இதற்கான அடிக்கல் நாட்டு விழா எம்எல்ஏ கோவிந்தராசு தலைமையில் நடந்தது. பேரூராட்சி செயல் அலுவலர் பொன்னுச்சாமி, தலைமை எழுத்தர் சிவலிங்கம், அதிமுக நகர செயலாளர் பக்கிரிசாமி முன்னிலை வகித்தனர். முன்னாள் கவுன்சிலர் ஆதனூர் ஆனந்தன் நன்றி கூறினார்.

No comments:
Post a Comment