பேராவூரணி: மயிலாடுதுறையில் நடந்த சாலை மறியல் போராட்டத்தின்போது கைதான பாஜ நிர்வாகிகளை விடுவிக்க கோரி பேராவூரணியில் சாலை மறியல் போராட்டம் நடந்தது.முத்துப்பேட்டையில் மீன் மார்க்கெட்டை அகற்ற வலியுறுத்தி நேற்று பாஜக நடத்திய உண்ணாவிரத போராட்டம் தொடர்பாக பாஜக மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம், தஞ்சை மாவட்ட தலைவர் பண்ணைவயல் இளங்கோ, பேட்டை சிவா உள்ளிட்ட நிர்வாகிகளை காவல்துறையினர் கைது செய்தனர். இதனைக் கண்டித்தும், கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தியும் பேராவூரணி அண்ணாசிலை அருகில் பாஜகவினர் சாலைமறியலில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்ட பாஜக சட்டமன்ற தொகுதி அமைப்பாளர் வீரசிங்கம், மாவட்ட துணைத்தலைவர் பெரியநாயகி, ஒன்றிய தலைவர்கள் பேராவூரணி சக்கரவர்த்தி செந்தில்குமார், சேதுபாவாசத்திரம் குகன், பெருமகளூர் பேரூர் தலைவர் ராஜரத்தினம் உள்ளிட்ட 35 பேரை போலீசார் கைது செய்தனர்.
Thursday, 21 June 2018
பேராவூரணியில் பாஜ சாலை மறியல்
pvi
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment