Saturday, 9 June 2018

காலகம் ஊராட்சியில் சிறப்பு திட்ட முகாம்

பேராவூரணி வட்டம்,  காலகம் ஊராட்சியில்  தமிழக அரசின் சிறப்பு திட்ட முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. முகாமிற்கு பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் கோவிந்தராசு தலைமை வகித்தார். முகாமில் பட்டா மாறுதல், குடும்ப அட்டை, முதியோர், விதவைத் தொகை உள்ளிட்ட 36 கோரிக்கை மனுக்களை பொதுமக்கள் அளித்தனர். முகாமில் வட்டாட்சியர் எல். பாஸ்கரன்,  வட்ட வழங்கல் அலுவலர் வில்சன்,  மண்டல துணை வட்டாட்சியர் செல்வகுமார் மற்றும்  பொதுமக்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து,  செருவாவிடுதி நடமாடும் மருத்துவக்குழு மருத்துவர்கள் தீபா, கீர்த்திகா தலைமையில் இலவச பொது மருத்துவ முகாம் நடைபெற்றது. கண் மருத்துவ நுட்பநர் திரவியம் கண் நோயாளிகளை பரிசோதனை செய்தார். 7 பேருக்கு கண்புரை நோய் இருப்பது கண்டறியப்பட்டு, அறுவை சிகிச்சைக்கு பரிந்துரை செய்யப்பட்டனர்.

No comments:

Post a Comment