Sunday, 24 June 2018

ஸ்டாலின் கைதைக் கண்டித்து பேராவூரணி & ரெட்டவயலில் சாலை மறியல்



பேராவூரணி: சென்னையில் ஆளுநர் மாளிகையை முற்றுகையிடச் சென்ற திமுக செயல் தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான ஸ்டாலின் உள்ளிட்ட திமுகவினர் சென்னையில் கைது செய்யப்பட்டனர். இதனைக் கண்டித்து பேராவூரணி பெரியார் சிலை அருகில் சனிக்கிழமை காலை சாலை மறியல் நடைபெற்றது. மறியலுக்கு திமுக ஒன்றியப் பொறுப்பாளர் க.அன்பழகன் தலைமை வகித்தார்.

ரெட்டவயல் கடைவீதியில் நடைபெற்ற சாலை மறியலுக்கு சேதுபாவாசத்திரம் தெற்கு ஒன்றியப் பொறுப்பாளர் ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். இரு இடங்களிலும் சாலை மறியலில் ஈடுபட்டதாக நூற்றுக்கும் மேற்பட்ட திமுகவினரை காவல்துறையினர் கைது செய்தனர்.

No comments:

Post a Comment