தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டத்தில் தமிழ்நாடு ஆதி திராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகம் (தாட்கோ) மூலம் 2017 - 18 ஆம் நிதியாண்டில் ரூ.159 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன என மாவட்ட ஆட்சியர் ஆ.அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.ஆதி திராவிடர் மக்களின் பொருளாதார வளர்ச்சிக்காக நிலம் வாங்கும் திட்டம், நில மேம்பாட்டுத் திட்டம், துரித மின் இணைப்பு திட்டம், தொழில் முனைவோர் திட்டம், இளைஞர்களுக்கான சுய வேலைவாய்ப்புத் திட்டம், மருத்துவக் கூடங்கள் அமைப்பதற்கான திட்டம், மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கான சுழல் நிதி திட்டம், மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கான பொருளாதார கடனுதவி திட்டம், மாவட்ட ஆட்சியரின் தன்விருப்ப நிதி, மேலாண்மை இயக்குநரின் தன் விருப்ப நிதி, தாட்கோ தலைவரின் தன்விருப்ப நிதி, இந்திய குடிமைப் பணி மற்றும் தமிழ்நாடு தேர்வாணைய பணிகளுக்கான முதன்மை தேர்வு எழுதுவோருக்கு நிதியுதவி, பட்டயக் கணக்கர், செலவு கணக்கர், நிறுவன செயலருக்கான நிதியுதவி, மகளிர் தையல் கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்கான நிதியுதவி, திறன் மேம்பாட்டு பயிற்சி போன்ற திட்டங்கள் தாட்கோ மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்த 2017-18 ஆம் நிதியாண்டில் நிலம் வாங்கும் திட்டத்தின் கீழ் 301 பயனாளிகளுக்கு ரூ.159 லட்சம் மானியத் தொகை வழங்கப்பட்டுள்ளது. தாட்கோ மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களில் பயன்பெற விரும்பும் தகுதியுடைய நபர்கள் hவவயீ://யயீயீடiஉயவiடிn.வயானஉடி.உடிஅ என்ற இணைய தளத்தில் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக தரை தளத்தில் அமைந்துள்ள அறை எண். 22 இல் தாட்கோ மாவட்ட மேலாளர் தியாகராஜனை நேரடியாகவோ அல்லது 04362-256679 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் ஆ.அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.
Sunday, 24 June 2018
தாட்கோ நலத்திட்ட உதவிகள் பெற விண்ணப்பிக்கலாம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment