Friday, 22 June 2018

சேதுபாவாசத்திரம் இறால் பண்ணையில் மின் வயர் திருடியவர் கைது

சேதுபாவாசத்திரம்: சேதுபாவாசத்திரத்தை அடுத்த சின்னமனை பகுதியைச் சேர்ந்தவர் இறால் பண்ணை அதிபர் வீரப்பன் (55). இவரது இறால் பண்ணையில் உள்ளமின்மோட்டாரில் உள்ள வயர்கள் அடிக்கடி திருட்டு போனதாக தெரிகிறது.இதையடுத்து இறால் பண்ணையை வீரப்பன் கண்காணித்து வந்துள்ளார். இந்நிலையில் செவ்வாயன்று இரவுமின்வயரை திருடிய மர்மநபரை பிடித்து சேதுபாவாசத்திரம் காவல்நிலையத்தில் வீரப்பன் ஒப்படைத்தார். காவல்துறை விசாரணையில் செப்புக் கம்பிகளுக்காக மின்வயரை திருடியது பட்டுக்கோட்டை தாலுகா மன்னங்காடு துவரங்குறிச்சி பகுதியைச் சேர்ந்த முருகானந்தம் ( 30) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரைகாவல்துறையினர் கைது செய்தனர்.

No comments:

Post a Comment