Saturday, 30 June 2018

பேராவூரணி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சுகாதார விழிப்புணர்வு முகாம்

பேராவூரணி: பேராவூரணி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், பொது சுகாதாரத் துறை சார்பில் நோய்த்தடுப்பு விழிப்புணர்வு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.இம்முகாமிற்கு வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் வி.சௌந்தர்ராஜன் தலைமை வகித்தார். பள்ளி பெற்றோர் - ஆசிரியர் கழக பொருளாளர் எஸ்.எம்.நீலகண்டன், பால் ஏ.பக்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மருத்துவர்கள் ரஞ்சித், தீபா, கீர்த்திகா, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சந்திரசேகரன், மருத்துவமில்லா மேற்பார்வையாளர் கண்ணன், சுகாதார ஆய்வாளர் பாலசந்தர் மற்றும் சுகாதார செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள், பள்ளி ஆசிரியர்கள், மாணவிகள் கலந்து கொண்டனர்.இம்முகாமில், காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள், தொற்றுநோய் வராமல் தடுப்பது குறித்தும், கைகளை கழுவுதல், சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருத்தல், நாப்கின் பயன்படுத்துவதன் அவசியம், அவற்றை அப்புறப்படுத்தி அழித்தல் குறித்து மாணவிகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.

No comments:

Post a Comment