பேராவூரணி:- சின்ன ரெட்டவயல் பகுதியில் இடிந்து விழும் நிலையில் உள்ள பயணிகள் நிழலகக் கட்டிடத்தை அகற்றி, புதிதாக அமைத்துத் தர வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியை அடுத்த சின்ன ரெட்டவயல் பகுதியில் சாலையோரம், இடிந்து விழும்நிலையில் பழமையான பயணிகள் நிழலகம் உள்ளது. இந்த நிழலகம் நான்குபுறமும் அடிப்பாகம் வலுவிழந்து, சரிந்து விழும் நிலையில் உள்ளது. சிமெண்ட் ஜன்னல்கள், இருக்கைகள் பெயர்ந்தும், சேதமடைந்தும் உள்ளது. மேற்பூச்சுகள் அடிக்கடிஉடைந்து விழுகின்றன. மிகப் பழமையான இக்கட்டிடம் எப்பொழுது உடைந்து விழுமோ என்ற நிலையில் உள்ளது.எனவே ஆபத்தான நிலையில் உள்ள இந்த பயணிகள் நிழலகத்தை உடைத்து அகற்றிவிட்டு புதிதாக அமைத்துத்தர வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.இதுகுறித்து கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர் வீ.கருப்பையா கூறுகையில், “ ரெட்டவயல், மணக்காடு, வீரக்குடி, நெல்லியடிக்காடு பகுதியில் இருந்து வரும் பள்ளி மாணவ, மாணவிகள், மருத்துவமனை, அலுவலகம் செல்லும் பொதுமக்கள், நோயாளிகள், மழைக்காக ஒதுங்கும் பயணிகள்,வாகன ஓட்டிகள் இந்த நிழலகத்தில் காத்திருந்தே பேருந்தில் பயணிக்கும் நிலை உள்ளது.பழமையான இந்த கட்டிடம் வலுவிழந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது. தற்போது மழைக்காலமாக இருப்பதால், உடைந்து விழுந்து அசம்பாவிதம் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. எனவே அதிகாரிகள் உடனடியாக இந்த நிழலகத்தை அகற்றி புதிதாக அமைத்துத்தர முன்வர வேண்டும்என்று வலியுறுத்தி உள்ளார்
Saturday, 9 June 2018
சின்ன ரெட்டவயல் கிராமத்தில் புதிய பயணிகள் நிழலகம் அமைத்திடுக! சிபிஎம் கோரிக்கை
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment