கங்காதரபுரம்: தஞ்சை பேராவூரணி அடுத்த கங்காதரபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் வெள்ளியன்று வருவாய்த்துறை சிறப்பு முகாம் வட்டாட்சியர் எல்.பாஸ்கரன் தலைமையில் நடைபெற்றது. வட்ட துணை ஆய்வாளர் (நில அளவை) செல்வராஜ், குருவிக்கரம்பை மின்பாதையாளர் ஆனந்தராஜ், வருவாய் ஆய்வாளர் ஜோதி, கிராம நிர்வாக அலுவலர் ராஜா மற்றும் வருவாய்த்துறை பணியாளர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 25-க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டன.தொடர்ந்து அழகியநாயகிபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் ரேவதி தலைமையில் பொது மருத்துவ முகாம் நடைபெற்றது. சுகாதார ஆய்வாளர் முருகானந்தம், செவிலியர் கலைச்செல்வி ஆகியோர் கலந்து கொண்டனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்றனர். மருந்து, மாத்திரைகள் இலவசமாக வழங்கப்பட்டன.
Saturday, 23 June 2018
கங்காதரபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் வருவாய்த்துறை சிறப்பு முகாம்
thanjavur
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment