Tuesday, 8 May 2018

தஞ்சாவூர், பட்டுக்கோட்டை வட்டங்களில் மே 12-ம் தேதி பள்ளி வாகனங்கள் ஆய்வு


தஞ்சாவூர், பட்டுக்கோட்டை வட்டங்களில் மே 12-ம் தேதி பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யப்படவுள்ளன. இதுகுறித்து ஆட்சியர் ஆ. அண்ணாதுரை தெரிவித்திருப்பது: மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி வாகனங்களின் இயக்கத்தை முறைப்படுத்தவும், ஓட்டுநர்களுக்குச் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் அனைத்து பள்ளி வாகனங்களையும் ஒரே நாளில் ஒரே இடத்தில் ஆய்வு செய்யப்படவுள்ளது. இதன்படி, தஞ்சாவூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலக எல்லைக்கு உட்பட்ட அனைத்து பள்ளி வாகனங்களையும் தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள மாநாகராட்சி மைதானத்திலும், பட்டுக்கோட்டை பகுதி அலுவலகத்துக்கு உட்பட்ட பள்ளி வாகனங்களை அரசு ஆண்கள் உயர்நிலைப் பள்ளி மைதானத்தில் மே 12-ம் தேதி காலை 8 மணிக்கு ஆய்வு மேற்கொள்ளப்படும். அப்போது, பதிவு சான்று, காப்புச் சான்று, அனுமதிச் சீட்டு, ஓட்டுநர் உரிமம், நடத்துநர் உரிமம், நடைச்சீட்டு ஆகிய அனைத்து ஆவணங்களுடன் வாகனங்களைக் கொண்டு சென்று ஆய்வுக்கு பள்ளி உரிமையாளர்கள் உட்படுத்த வேண்டும். ஆய்வுக்கு உட்படுத்தப்படாத வாகனங்களின் அனுமதி சீட்டை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

No comments:

Post a Comment