2018-19ஆம் கல்வியாண்டில் குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009, சட்டப்பிரிவு 12(க)(சி)ன் கீழ் சிறுபான்மையற்ற தனியார் சுயநிதிப் பள்ளிகளில் நுழைவு நிலை வகுப்பில் (School Entry Level Class) 25% இலவச கல்வி ஒதுக்கீட்டில் வாய்ப்புகள் மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கான சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தஞ்சாவூர் மாவட்டத்தில் மேற்காண் சேர்க்கைக்கு மெட்ரிகுலேசன் பள்ளிகளில் 1814 காலியிடங்களும், மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளிகளில் 2367 காலியிடங்களும் ஆக மொத்தம் 4181 காலியிடங்கள் உள்ளன. விண்ணப்பங்களை பொதுமக்கள் முதன்மைக்கல்வி அலுவலர் அலுவலகம், மெட்ரிகுலேசன் பள்ளிகள் ஆய்வாளர் அலுவலகம், மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் அலுவ0லகம், உதவி தொடக்கக்கல்வி அலுவலர் அலுவலகம், வட்டார வளமையம், அரசு இ-சேவை மையங்கள் ஆகிய அலுவலகங்களை தொடர்பு கொண்டு www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யலாம். மேற்காண் இணைய வழியாக விண்ணப்பிக்க அரசால் கால அவகாசம் 20.04.2018 முதல் 18.05.2018 வரை வழங்கப்பட்டுள்ளது. எனவே, இந்த அரசின் அறிவிப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறும், இணைய வழியில் விண்ணப்பிக்க உரிய சான்றுகளுடன் தொடர்புடைய அலுவலகங்களை பொதுமக்கள் அணுகலாம் எனவும் இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு முதன்மைக் கல்வி அலுவலர் சுபாசினி அவர்கள் தெரிவித்துள்ளார்.
Wednesday, 9 May 2018
தஞ்சை மாவட்ட தனியார் பள்ளிகளில் 4181 இலவச சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வரவேற்பு!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment