



தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி வாகனங்கள் மாணவர்கள் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக மாவட்ட வருவாய் அலுவலர் ந.சக்திவேல் ஆய்வு செய்தார். தஞ்சாவூர் மாவட்டம், புதிய பேருந்து நிலையம் அருகாமையில் உள்ள மாநகராட்சி மைதானத்தில் வட்டார போக்குவரத்து துறையின் மூலம் அனைத்து பள்ளி வாகனங்களும் மாவட்ட வருவாய் அலுவலர் ந.சக்திவேல் தலைமையில் இன்று (12.05.2018) ஆய்வு செய்யப்பட்டது. மாவட்ட வருவாய் அலுவலர் ந.சக்திவேல் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்து தெரிவித்ததாவது; தஞ்சாவூர், பட்டுக்கோட்டை கல்வி மாவட்டத்தில் உள்ள 39 பள்ளிகளில் இயங்கி வரும் 289 பள்ளி வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இன்று 175 வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டு 5 பள்ளி வாகனங்கள் நிராகரிக்கப்பட்டது. இதில் தஞ்சாவூர் கல்வி மாவட்டத்தில் உள்ள 53 பள்ளிகளில் இயங்கி வரும் 330 பள்ளி வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இன்று 248 வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டு 20 பள்ளி வாகனங்கள் நிராகரிக்கப்பட்டது. இதே போல் கும்பகோணம் கல்வி மாவட்டத்தில் உள்ள 44 பள்ளிகளில் இயங்கி வரும் 166 பள்ளி வாகனங்கள பதிவு செய்யப்பட்டுள்ளது. இன்று 135 வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டு 13 பள்ளி வாகனங்கள் நிராகரிக்கப்பட்டது. இந்த ஆய்வில் முக்கியமாக வாகன ஓட்டுநர்கள் மற்றும் குழந்தைகளுக்கிடையிலான தடுப்புகள் பள்ளி வாகனத்தில் செய்யப்பட்டுள்ளதா எனவும், படிக்கட்டுகள் குழந்தைகள் ஏறும் இறங்கும் அளவுக்கு சரியாக உள்ளதா எனவும், பள்ளி வாகனத்தில் அவசர நேரத்தில் வெளியேறுவதற்கான அவசர வழி, தீயணைப்பு கருவி, மருத்துவ உபகரணங்கள், ஓட்டுநர்களின் உரிமம் ஆகியவை ஆய்வு செய்யப்பட்டது. ஆய்வில் பள்ளி வாகனங்களுக்கு வகுக்கப்பட்டுள்ள விதிமுறைகளுக்கு தகுதியில்லாத வாகனங்கள் இருப்பின், அவ்வாகனத்திற்கு அனுமதி அளிக்கப்படாது என மாவட்ட வருவாய் அலுவலர் ந.சக்திவேல் தெரிவித்தார். பின்னர் சாலை பாதுகாப்பு உறுதிமொழியினை மாவட்ட வருவாய் அலுவலர் அவர்கள் வாசிக்க அனைத்து பள்ளி வாகன ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் உறுதிமொழியினை ஏற்றுக்கொண்டனர் இந்த ஆய்வின் போது முதன்மை கல்வி அலுவலர் சுபாஷினி, வட்டார போக்குவரத்து அலுவலர் என்.கார்த்திகேயன், போக்குவரத்து ஆய்வாளர் திரு. சுந்தரராமன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.
No comments:
Post a Comment