Saturday, 12 May 2018

ஆவணம்- பெரிய நாயகிபுரத்தில் குடியிருப்பு பகுதிக்கு செல்லும் பொதுப் பாதை ஆக்கிரமிப்பு அகற்றம்

பேராவூரணி  .: ஆவணம்- பெரிய நாயகிபுரத்தில் குடியிருப்பு பகுதிக்கு செல்லும் பொதுப் பாதை ஆக்கிரமிக்கப்பட்டது. இதனால் குடியிருப்பு பகுதிக்குள் செல்லும் வழி தடுக்கப்பட்டது. இந்த ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என அதே பகுதியைச் சேர்ந்த கருப்பையன் மகன் விஸ்வநாதன், தங்கராசு மகன் மகேந்திரன் ஆகியோர் பட்டுக்கோட்டை கோட்டாட்சியர் கோவிந்த ராசுவிடம் மனு அளித்தனர்.  இதையடுத்து வட்டாட்சியர் எல்.பாஸ்கரன், திருச்சிற்றம்பலம் காவல்துறை ஆய்வாளர் செந்தில்குமரன் உள்ளிட்டோர் ஆக்கிரமிப்பு வைக்கோல் போரை அகற்றி பாதையை மீட்டனர்.

No comments:

Post a Comment