Saturday, 12 May 2018

காரைக்குடி- பட்டுக்கோட்டை ரயில் சேவை தொடங்க கோரிக்கை




 பேராவூரணி  : காரைக்குடி- பட்டுக்கோ ட்டை ரயில் சேவையை விரைந்து தொடங்க வே ண்டும் என பேராவூரணி ரயி ல்வே பயனாளிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.தஞ்சை மாவட்டம் பேரா வூரணி ஊராட்சி ஒன்றிய கிழக்கு தொடக்க ப்பள்ளியில் ரயில்வே பயனாளிகள் சங்க அமைப்பு கூட்டம், ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் ஏ.மெய்ஞானமூர்த்தி தலைமையில் நடைபெற்றது. ஓய்வு பெற்ற தலைமை யாசிரியர் கே.வி.கிரு ஷ்ணன், வர்த்தக சங்க முன்னாள் செயலாளர் பாரதி வை.நடராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் புதிய சங்கத் தலைவராக ஏ.மெய்ஞானமூர்த்தி, செயலாளராக ஏ.கே.பழனிவேலு, பொருளாளராக சி.கணேசன், அமைப்பா ளராக கே.வி.கிருஷ்ணன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். சு.போசு, வி.கோபால், ஏ.கே.வெள்ளிமலை, மு.வீரா உள்பட 25 பேர் கொண்ட செயற்குழுவும் அமைக்க ப்பட்டது.கூட்டத்தில், அகல ரயில் பாதை பணி முடிவடைந்த காரைக்குடி- பட்டுக்கோட்டை இடையே விரைந்து ரயில் சேவையை தொடங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

No comments:

Post a Comment