Saturday, 12 May 2018

தஞ்சாவூர் மாவட்டத்தில் இலவச கல்வி ஒதுக்கீடுமாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்

தஞ்சாவூர் மாவட்டத்தில் 2018-19ம் கல்வியாண்டில் இலவச கல்வி ஒதுக்கீட்டில் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கான தனியார் பள்ளி சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.  இதில் மெட்ரிக்குலேசன் பள்ளிகளில் 1,814 காலியிடம், மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளிகளில் 2,367 என மொத்தம் 4181 காலியிடம் உள்ளது. இதற்கான விண்ணப்பங்களை, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம், மெட்ரிக்குலேசன் பள்ளிகள் ஆய்வாளர் அலுவலகம், மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலகம், உதவி தொடக்கக் கல்வி அலுவலகம், வட்டார வளமையம், அரசு இ-சேவை மையங்கள் ஆகிய அலுவலகங்களை தொடர்பு கொண்டு www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யலாம் என முதன்மைக் கல்வி அலுவலர் சுபாசினி தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment