Saturday, 12 May 2018

நாட்டாணிக்கோட்டையில் நிலத்தை பதிவு செய்து தர குடியிருப்போர் கோரிக்கை

பேராவூரணி: நாட்டாணிக்கோட்டையில் நில உரிமையாளர் மற்றும் கிரயம் பெற்று பல ஆண்டாக குடியிருந்து வருவோர் இடையேயான பிரச்சனையில் பொதுமக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தனர். இந்நிலையில் வட்டாட்சியர் அலுவலகத்தில் சட்டமன்ற உறுப்பினர் மா.கோவிந்தராசு முன்னிலையில், வட்டாட்சியர் எல்.பாஸ்கரன் தலைமையில் சமாதான பேச்சுவார்த்தை நடைபெற்றது. காவல்துறை ஆய்வாளர் ஜனார்த்தனன், வருவாய் ஆய்வாளர் அஷ்ரப் அலி, கிராம நிர்வாக அலுவலர் முத்துக்கிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில் கிரயம் பெற்று பூர்வீகமாக குடியிருந்து வருபவர்களுக்கு நிலத்தை பத்திரப்பதிவு செய்து தருமாறு பொதுமக்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. இதையடுத்து தொடர்புடைய நபரின் பெயரில் பத்திரப் பதிவு செய்து, கிரயமாக நில உரிமையாளர்கள் இருவரும் எழுதித் தருவது, ஜூன் முதல் வாரத்தில் குறிப்பிட்ட தேதியில் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தி உறுதி செய்யப்படும் என முடிவு செய்யப்பட்டது.

No comments:

Post a Comment