காரல் மார்க்ஸின் 200 ஆவது பிறந்த தின விழா தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்- கலைஞர்கள் சங்கத்தின் சார்பில், பேராவூரணி தமிழ் பல்கலைக்கழக கல்வி மைய வளாகம், பெரியார்-அம்பேத்கர் நூலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தமுஎகச கிளைத் தலைவர் சமந்தா தலைமை வகித்தார். செயலர் வெங்கடேசன் வரவேற்றார். அறந்தாங்கி பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரி தமிழ்த்துறை பேராசிரியர் கணேசகுமார், மார்க்ஸ் குறித்து பேசினார். வேலுச்சாமி, ஜேம்ஸ், நீலகண்டன், பைங்கால் மதி, உதயகுமார், நீலமோகன், கார்த்திகேயன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தமுஎகச கிளை பொருளாளர் கலைச்செல்வன் நன்றி கூறினார். இதேபோல ரெட்டவயல் கடைவீதியில் தமிழக மக்கள் விடுதலை இயக்கம் சார்பில் தெருமுனை கூட்டம் நடைபெற்றது . முனைவர் ஜீவானந்தம் வழக்குரைஞர் கருப்பையன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

No comments:
Post a Comment