Monday, 7 May 2018

பேராவூரணி வேளாண் கோட்டத்தில் விவசாயிகள் நல்வாழ்வு பணிமனை நிகழ்ச்சி

பேராவூரணி வட்டத்தில் கிராம ஸ்வராஜ் இயக்கத்தின் கீழ் விவசாயிகள் நல்வாழ்வு பணிமனை நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது.    2022-க்குள் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பு ஆக்குவது தொடர்பாக கிராம சுயாட்சி இயக்கத்தின் கீழ் விவசாயிகள் நல்வாழ்வு பணிமனை கருத்தரங்க நிகழ்ச்சி  பேராவூரணி ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்டரங்கில்  நடைபெற்றது.விழாவுக்கு தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தலைவர் உ. துரைமாணிக்கம் தலைமை வகித்தார் . முன்னாள் ஒன்றிய குழு தலைவர் சாந்தி அசோக்குமார் முன்னிலை வகித்தார் . வட்டார வேளாண்மை அலுவலர் ராணி வரவேற்றார். விழாவில்,   வேளாண்மைத் துறை,  தோட்டக்கலைத் துறை,  வேளாண் பொறியியல் துறை,  வேளாண் வணிகம் மற்றும் விற்பனைத் துறை,  கால்நடை பராமரிப்புத் துறை,  தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம்,  பட்டு வளர்ச்சி துறை,  மீன் வளர்ப்பு துறை,  தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலகம் சார்ந்த பல்துறை தொழில்நுட்ப வல்லுநர்கள்  கலந்து கொண்டு அந்தந்த துறை சார்ந்த தொழில்நுட்பங்கள், நடப்பாண்டில் செயல்படுத்தப்பட்டு வரும் மானிய திட்டங்கள் ஆகியவற்றை விரிவாக எடுத்துரைத்தனர்.  வேளாண்மைத் துறை சார்பில் 50 விவசாயிகளுக்கு தேசிய மண்வள அட்டைகள்,  25 விவசாயிகளுக்கு 50 சத மானியத்தில் சான்று பெற்ற உளுந்து விதைகள்,  10 விவசாயிகளுக்கு 50 சத மானியத்தில் இனகவர்ச்சி பொறிகள்,  10 விவசாயிகளுக்கு திரவ வடிவிலான உயிர் உரங்கள்,  5 விவசாயிகளுக்கு நுண்ணீர் பாசன திட்டத்தின் கீழ் தெளிப்பு நீர் கருவிகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் உழவன் செயலி பதிவிறக்க செயல்விளக்கம்,   மண்மாதிரி சேகரிப்பு செயல்விளக்கம் ஆகியவை செய்து காண்பிக்கப்பட்டன.  

No comments:

Post a Comment