தஞ்சாவூரில் (06.05.2018) அன்று நடைபெற்ற தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் ஆய்வக உதவியாளர், பணிகளுக்கான போட்டித் தேர்வினை (C Examination) மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை மற்றும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய குழு உறுப்பினர் ஏ.வி.பாலுசாமி ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள். ஆய்விற்கு பிறகு மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்ததாவது; தேர்வு கண்காணிப்பில் ஈடுபடும் அலுவலர்கள் கவனமாக பணியாற்றவும், 100 சதவிகிதம் தவறுகள் நடைபெறாமல் கண்காணிக்கவும், தவறு செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இத்தேர்விற்கு தஞ்சாவூரில் 19 மையங்களில் 7429 நபர்கள் தேர்வு எழுத விண்ணப்பித்து இருந்தனர். இன்று நடைபெற்ற தேர்வில் 4292 நபர்கள் தேர்வு எழுதினர். 3137 நபர்கள் தேர்வு எழுத வரவில்லை. இது 57.8% ஆகும். தேர்வு தொடங்கிய அரை மணி நேரத்திற்கு பின்னர் அதாவது 10.30 மணிக்கு பின்னர் தேர்வர்கள் யாரையும் தேர்வு அறைக்குள் அனுமதிக்கக் கூடாது எனவும், தேர்வர்கள் எவரும் செல்போன், ஐபேட், கால்குலேட்டர், டேபிளேட் மற்றும் அதிநவீன மின்னணு சாதனங்கள் பயன்படுத்தக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. தேர்வு நடைபெறும் மையத்தில் அடிப்படை வசதிகளான குடிநீர் வசதி, மின் வசதி, செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை தெரிவித்தார். ஆய்வின்போது தஞ்சாவூர் வருவாய் கோட்ட அலுவலர் சுரேஷ் மற்றும் வட்டாட்சியர் தங்க பிரபாகரன் ஆகியோர் உடனிருந்தனர்.

No comments:
Post a Comment